Header Ads

  • BREAKING



    சிவா அய்யாதுரைக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்கியது காக்கர்.

    காக்கர் மீடியா, சிவா அய்யாதுரைக்கு, ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்கியுள்ளது.
    இந்திய வம்சாவழி அமெரிக்கரான சிவா அய்யாதுரை இ-மெயிலை 1979-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இதற்கான காப்பி ரைட்டை 1982- ஆம் ஆண்டு அவர் பெற்றார். இந்நிலையில் காக்கர் மீடியா சிவா அய்யாதுரை இ-மெயிலை கண்டுபிடிக்கவில்லை என்று அவதூறு பரப்பி வந்தது. மேலும், இது தொடர்பாக பல்வேறு கட்டுரைகளையும் காக்கர் பிரசுரித்து வந்தது.
    இதைடுத்து காக்கர் மீடியா மீது சிவா அய்யாதுரை அவதூறு வழக்கு தொடத்திருந்தார். இந்நிலையில் சிவா அய்யாதுரை குறித்து அவதூறாக எழுதிய கட்டுரைகளை காக்கர் மீடியா அழித்ததுடன். பஞ்சாயத்தை நீதி மன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று நினைத்த, காக்கர், சிவா அய்யாதுரைக்கு 7,50,000 அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்கியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad