மாற்றுத் திறனாளி அக்கா, தம்பி கொலை வழக்கில் தாய் உள்பட 5 பேர் கைது.
ஒசூர் அருகே மாற்றுத்திறனாளி அக்காள், தம்பி கொலை வழக்கில் தாய் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஒசூர் அருகே கலுகொண்டப்பள்ளி பெரியமேன அகரம் பகுதியில் உள்ள தைலத் தோப்பில் கடந்த மாதம் 7-ஆம் தேதி இளம்பெண்ணும், தளி அருகே பள்ளப்பள்ளி சாரண்டப்பள்ளி சாலையில் இளைஞரும் சடலமாகக் கிடந்தனர்.
இருவரின் சடலங்களையும் மத்திகிரி போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் சடலமாகக் கிடந்தவர்கள், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள பென்னங்கூரை அடுத்த எல்லையூரைச் சேர்ந்த சீனிவாசன், வெங்கட லட்சுமம்மா தம்பதியின் மகள் மஞ்சு (23), மகன் முத்தப்பா (22) என்பதும், இருவரும் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதும் தெரிய வந்தது.

அதில் வெங்கட லட்சுமம்மா தனது 2-ஆவது கணவரான சுரேஷ் (36), அவரது தம்பி கோபால் (எ) கோபி (24), சாந்தி (27) ஆகியோருடன் சேர்ந்து மஞ்சு, முத்தப்பாவை கொலை செய்ததும், இதற்கு கார் ஓட்டுநர் நவீன்குமார் (24) என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீஸார் கைது செய்து, கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில்,
வெங்கட லட்சுமம்மாவுக்கு அவரது தந்தை நாகப்பா சொத்தை விற்று ரூ.50 ஆயிரம் மட்டுமே அளித்தாராம்.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் இருவரையும் தான் வளர்த்து வருவதால் பணம் குறைவாக அளித்ததாகக் கூறினாராம். இதனால் தனது குழந்தைகள் இருக்கும் வரை பணம் கிடைக்காது என்று எண்ணிய வெங்கட லட்சுமம்மா, தனது 2-ஆவது கணவர் சுரேஷ் உள்பட 5 பேருடன் சேர்ந்து குழந்தைகள் இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது.

கருத்துகள் இல்லை