டால்மியா பாரத் - ஓ.சி.எல்., இணைப்பு; இயக்குனர் குழுமம் ஒப்புதல்.
மும்பை : டால்மியா பாரத் - ஓ.சி.எல்., இந்தியா நிறுவன இணைப்புக்கு, அதன் இயக்குனர் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. டால்மியா பாரத் குழுமத்தில், ஓ.சி.எல்., இந்தியா; டால்மியா சிமென்ட், ஒடிசா சிமென்ட் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. தற்போது, அவை, தனித்தனி நிறுவனங்களாக செயல்படுகின்றன. இந்நிலையில், டால்மியா பாரத், தன் குழுமத்தின் நிர்வாக நடைமுறைகளை எளிதாக்க, ஓ.சி.எல்., நிறுவனத்தை, தன்னுடன் இணைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு, அதன் இயக்குனர் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், நாட்டின் சிமென்ட் துறையில், நான்காவது பெரிய நிறுவனமாக, டால்மியா திகழும் என, தெரிகிறது. இது குறித்து, டால்மியா பாரத் குழும நிர்வாக இயக்குனர் புனித் டால்மியா கூறுகையில், ''இந்தியாவில், சிமென்ட் உற்பத்தியில், எங்கள் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
இந்த இணைப்பு, அதற்கு மேலும் வலு சேர்க்கும்,'' என்றார்.







கருத்துகள் இல்லை