ஆட்டோ பந்தயம் - 8 பேர் கைது.
சென்னையில் இருந்து விழுப்புரம் வந்து ஆட்டோ பந்தயத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 3 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து 35 பேர் 10 ஆட்டோக்களில் விழுப்புரம் வந்துள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புறவழிச்சாலையில் இவர்கள் ஆட்டோ பந்தயம் நடத்தியுள்ளனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 10, ரூபாய் 15 ஆயிரம் என தொகை வைத்து இந்த பந்தயத்தை நடத்தியுள்ளனர்.
இந்த தகவல் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சதியசீலன், எஸ்ஐ பெருமாள் தலைமையிலான போலுசார் பந்தயம் நடந்த இடத்திற்கு சென்று சுற்றி வளைத்தனர்.
போலீசாரை கண்டதும் அனைவரும் தப்பியோடினர். இதில் 8 பேரை போலீசார் துரத்திச் சென்று கைது செய்தனர். சென்னை பெத்தேரியைச் சேர்ந்த ராஜா, சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, மாதாவரம் மோகன், மறைமலைநகர் ஜானகிராமன், வெங்கடேசன், ராஜேஷ், மகேஷ், பாலாஜி ஆகியோரை கைது செய்தனர். 3 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். மேலும் 7 ஆட்டோக்களையும், தப்பியோடியவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.







கருத்துகள் இல்லை