Header Ads

  • BREAKING



    ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும்: பிரதமர் மோடி.

    ஆக்ரா: ஆக்ராவில் வீடு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்றும் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
    உத்திரபிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், 2022ம் ஆண்டுக்குள் அனைத்து ஏழை மக்களுக்கும் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad