Header Ads

  • BREAKING



    துருக்கியில் 9 பத்திரிகையாளர்கள் கைது.

    துருக்கியில் 9 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    துருக்கி அரசுக்கு எதிராக செய்திகள் மற்றும் கேலிச் சித்திரங்கள் வெளியிட்டு வந்த கும்ரியத் அல்லதி தி ரிபப்ளிக் என்ற பத்திரிகையின் செய்தியாளர்கள் 9 பேரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது.
    அந்நாட்டில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊடகங்கள் மீது எர்டோகன் தலைமையிலான அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் 9 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பத்திரிகை வழக்கறிஞர் கூறும் போது பொதுமக்களின் உரிமைகள் சிறைகம்பிகளுக்கு பின்னால் அடைக்கப்படுகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad