பெட்ரோல், டீசல் விலை உயர்வு.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று உயர்த்தியுள்ளன.
பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 89 காசுகளும், டீசல் லிட்டர் ஒன்றிற்கு 86 காசுகளும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 67.13 ரூபாய்க்கும், டீசல் 58.02 ரூபாய்க்கும் விற்கப்படும்.
எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றது.
சர்வதேச அளவிலான கச்சா எண்ணெயின் விலை, சர்வதேச அளவில் இந்திய பணத்தின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







கருத்துகள் இல்லை