பூண்டி ஏரியை வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்.
ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து கடந்த 9-ஆம் தேதி திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் வியாழக்கிழமை காலை பூண்டி ஏரியை வந்தடைந்தது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி கடும் வறட்சியைக் கண்ட நிலையில், தமிழகத்துக்கு தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆந்திர மாநில அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். அதன்பேரில், கடந்த மாதம் 11-ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால், போதிய அளவு நீரை அனுப்பாமல் கடந்த 7-ஆம் தேதி ஆந்திர மாநில அதிகாரிகள் தண்ணீரை நிறுத்தினர்.
இதையடுத்து, தமிழக அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தியதன்பேரில் 9-ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டது.

அது, தற்போது விநாடிக்கு 1,500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் திறக்கப்பட்ட தண்ணீர் தெலுங்கு கங்கை கால்வாய் வழியாக 152 கி.மீ. தொலைவைக் கடந்து தமிழக எல்லையான தாமரைக்குப்பத்தில் உள்ள ஜீரோ பாயின்ட்டுக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வந்தடைந்தது. அங்கிருந்து 24 கி.மீ. தொலைவுள்ள பூண்டி ஏரிக்கு வியாழக்கிழமை காலை 6.45 மணியளவில் விநாடிக்கு 80 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து, ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை