Header Ads

  • BREAKING



    மோடியை புகழ்ந்த டிரம்ப், இந்திய நண்பர்களின் சந்திப்பில்.

    நியுயார்க்: இந்திய நண்பர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் மோடியின் பணிகளை அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப் புகழ்ந்தார். அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் மிகப்பெரிய தொழில் அதிபர். அவரது நிறுவனங்கள் சார்பில் இந்தியாவில் 5 முக்கிய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 
    மும்பையில் டிரம்ப் டவர், புனேயில் 46 குடியிருப்பு வளாகம் மற்றும் 300 குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த தொழில்களில் நண்பர்களாக உள்ள அதுல் சோர்டியா, சாகர் சோர்டியா, கால்பீஷ் மெக்தா உள்ளிட்டோரை நியுயார்க்கில் உள்ள தனது டிரம்ப் டவரில் வைத்து டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது டிரம்ப் மகள் இவாங்கா, மகன்கள் எரிக் மற்றும் டொனால்டு டிரம்ப் ஜூனியர் உள்ளிட்ட குடும்பத்தினர் அங்கு இருந்தனர்.
    இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடியையும், அவரது பணிகளையும் டிரம்ப் வெகுவாக புகழ்ந்தார். மோடி பிரதமரான பின் இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்திய பொருளாதாரம் பற்றி அவர் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு உறவு மேம்பட்ட நிலையில் உள்ளது. 
    இனி நட்பு கூடுதலாக விரிவடையும். குறிப்பாக ராணுவ விவகாரங்களில் இருநாட்டு ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டார். அதே சமயம் பழைய நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மோடியின் திட்டம் பற்றி டிரம்ப் மகன்கள் மற்றும் மகள் கூறும்போது, ''அசாத்தியமான தைரியமிக்க நடவடிக்கை'' என்று குறிப்பிட்டனர். இந்த தகவலை டிரம்பின் இந்திய நண்பர் சாகர் சோர்டியா தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad