மகளுக்கு ஹீரோயின் வாய்ப்பு, தனுஷிடம் கேட்கும் கவுதமி.
கமலுடன் லிவிங் டு கெதர் பாணியில் கடந்த 13 வருடத்துக்கும் மேலாக வாழ்ந்து வந்த கவுதமி சமீபத்தில் அவரைவிட்டு பிரிந்தார். மகள் சுப்புலட்சுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார். சுப்புலட்சுமிக்கும் ஹீரோயின் ஆசை வந்திருக்கிறது. அதை கவுதமியிடம் தெரிவித்தபோது அவரும் சம்மதித்தார். மகளின் ஆசையை பூர்த்தி செய்யும் அதேவேளையில் பெரிய ஸ்டார் அல்லது பெரிய இயக்குனர் படங்களில் அறிமுகப்படுத்த முடிவு செய்திருக்கிறார்.
ரஜினி மகள் ஐஸ்வர்யாவை மணந்திருக்கும் தனுஷ் மனைவிக்கு '3' படத்துக்கு கால்ஷீட் கொடுத்து இயக்குனர் ஆக்கினார். அதில் கமல் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடித்தார்.
அதேபோல் இந்தியில் 'ஷமிதாப்' படத்தில் கமலின் 2வது மகள் அக்ஷராவுடன் ஜோடிபோட்டு நடித்தார். தற்போது ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க கால்ஷீட் தந்திருக்கிறார்.
கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தனுஷ் ஜோடியாக சுப்புலட்சுமி நடிப்பது பொருத்தமாக இருக்கும் என கவுதமி கருதுவதால் அவரிடம் மகளுக்காக வாய்ப்பு கேட்டு பேச்சு நடத்துகிறாராம். அதே சமயம் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிப்பதற்கும் வாய்ப்பு எதிர்பார்ப்பதுடன் தனக்கு தெரிந்த பெரிய இயக்குனர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் கவுதமி. சுப்புலட்சுமிக்கு ஏற்கனவே படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதற்கு கவுதமி சம்மதிக்கவில்லை. பெரிய வாய்ப்புக்காக அவர் காத்திருப்பதே அதற்கு காரணம்.







கருத்துகள் இல்லை