சன்னி லியோன் நடிக்கும் ராத்ரி!
கடந்த 17 வருடங்களாக இயங்கி வரும் ஸ்ரீ பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் பட நிறுவனம், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த ராகினி எம்.எம்.எஸ் 2 என்கிற ஹிந்திப் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ராத்ரி என்கிற பெயரில் டப் செய்து வெளியிடுகிறது. இதன்மூலம் அந்த நிறுவனம் தென்னிந்தியத் திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறது.
ராத்ரி படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார். கவர்ச்சியாக மட்டுமில்லாமல் பயங்கரமான பேயாகவும் நடித்துள்ளார் சன்னி லியோன். பூஷன் பட்டேல் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு சித்ரஞ்சன் பட், மீட்பராய் அஞ்சான், யோ யோ ஹனிசிங், பிரனாய் ரிஜியா, அமர் மொஹைல் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள்.
சன்னி லியோன் நடனமாடிய பேபி டால் என்கிற பாடலை இதுவரை 8 கோடி பேர் யூடியூபில் பார்த்து ரசித்துள்ளார்கள். ராத்ரி படத்தின் வசனங்களையும், பாடல்களையும் சிவந்தி, ரணதந்த்ரா, அதர்வணம் போன்ற படங்களின் இயக்குனரான ஆதிராஜன் எழுதியுள்ளார். வசனம் உதவி நந்து.
இவர் எழுதிய, ஜொலி ஜொலிக்கும் டிஜிட்டல் பொண்ணு... தெறி தெறிக்கப் பார்த்தா ஜின்னு என்கிற பாடலை பிரபல நடிகை ரம்யா நம்பீசன் கிக் ஏற்றும் குரலில் பாடியுள்ளார்.
ஒரு பேய் பங்களாவுக்குப் படப்பிடிப்புக்குச் செல்லும் படக்குழுவினர் அங்கிருக்கும் பேயால் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் இந்தப் படத்தின் திகிலான கதை. திகில் காட்சிகள் பல கோடி ரூபாய் செலவில் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளன. ஷோபா கபூர், ஏக்தா கபூர் ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள்.







கருத்துகள் இல்லை