பழைய நோட்டுகளை முறைகேடாக மாற்ற கூடாது: வங்கி ஊழியர்களுக்கு நிதித்துறை எச்சரிக்கை
புது தில்லி: வங்கி ஊழியர்கள், முறைகேடான வகையில் பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுத் துறை வங்கியின் மூத்த ஊழியர்கள் தரப்பில் கூறப்படுவதாவது, வங்கியில் டெபாசிட் செய்ய வரும் அல்லது பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை வாங்க வரும் வாடிக்கையாளர்களின் விவரங்களை சில வங்கி ஊழியர்கள் முறையாக பராமரிப்பதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
அதே போல, சில வங்கி ஊழியர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களின் பணத்தை பெற்றுக் கொண்டு அதனை தினந்தோறும் குறைந்த அளவில் மாற்றித் தருவதாகவும் புகார்கள் வந்துள்ளன.
இது, நவம்பர் 24ம் தேதி வரை தனி ஒருவர் ரூ.4000 வரை பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் விதிமுறையை மீறுவதாகும்.
வங்கிகளில் பணப் பரிமாற்றம் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, வங்கிகளில் எந்த முறைகேடு நடந்தாலும் அதற்கு ஆர்பிஐ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.







கருத்துகள் இல்லை