கமிஷன் அடிப்படையில் பணம் மாற்றினால் சம்மந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் - மத்திய அரசு கடும் எச்சரிக்கை.
கமிஷனுக்காக பழைய 5௦௦, 1௦௦௦ ரூபாய் நோட்டுக்களை மாற்றி தரும் வங்கி மேலாளர்கள் , ஊழியர்கள் கைது செய்யப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புழக்கத்தில் இருந்த பழைய நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் தாங்கள் கையில் இருப்பு வைத்திருக்கும் பணத்தை வங்கிகளில் வரிசையில் நின்று மாற்றி வருகினறனர்.
தொடர்ந்து, மக்கள் கையில் இருப்பு வைத்துள்ள பணத்தை வங்கியில் செலுத்தி ரூ.4500 வரை மாற்றி கொள்ளலாம். வருமானத்திற்கு அதிகமாக பணத்தை செலுத்தினால் 2௦௦ சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, கருப்புபண முதலைகளிடம் பெரிய தொகையை பெற்று கொண்டு எந்தவித அடையாள அட்டையும் இன்றி 25%முதல் 35% வரை கமிஷன் பெற்றுக்கொண்டு வங்கி அதிகாரிகள் பணத்தை கைமாற்றி தருவதாக தகவல்கள் பரவின.
ஐதராபாத்தில் உள்ள அரசு வங்கியில் வேலை பார்க்கும் 2 அதிகாரிகள், எவ்வித ஆவணமும் இல்லாமல், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் போட்டு ரூ.6 லட்சம் ரூபாயை மாற்றியதால், அவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று முதல் கமிஷனுக்கு பணம் மாற்றி தரும் வங்கி மேலாளர்கள் , ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் கைது செய்யப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.







கருத்துகள் இல்லை