அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியினர் நீதிபதியாக வாய்ப்பு?
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் காலியாகவுள்ள இடத்துக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீதிபதி அமுல் தாப்பர் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த விவரம்: 47 வயதான அமுல் தாப்பர் தற்போது கென்டக்கி மாகாணத்தில் நீதிபதியாக உள்ளார். ஜார்ஜ் டபுள்யு புஷ் அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தபோது, 2007-இல் அமுல் தாப்பரை மாகாண நீதிபதியாக நியமனம் செய்தார். அந்தப் பொறுப்பில் அவர் திறம்படச் செயலாற்றி வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தற்போது காலியாகவுள்ள இடத்துக்கு அவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்துக்குப் பொருத்தமானவராக இருப்பார்கள் என்பவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை டிரம்ப் அண்மையில் வெளியிட்டார்.

அவர் அதிபரானால் நியமனம் செய்யக் கூடிய வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் அமுல் தாப்பர் பெயர் இடம் பெற்றது. இந்தப் பட்டியலை டிரம்ப் தரப்பினர் ஏற்கெனவே வெளியிட்டபோதிலும், அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நீதிபதி நியமன நடவடிக்கை உண்மையிலேயே நிகழும் நிலை எழுந்துள்ளது.
தனது பதவிக் காலத்தில் 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் வாய்ப்பு டிரம்ப்புக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. காலியாகவுள்ள இடத்துக்கு, குடியரசுக் கட்சியினரின் எதிர்ப்பை மீறி நீதிபதி மெரிக் கார்லண்ட் என்பவர் பெயரை அதிபர் ஒபாமா பரிந்துரை செய்தார். ஆனால் அது நாடாளுமன்றத்தில் உறுதி செய்யப்படவில்லை. குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள நாடாளுமன்றத்தில் ஒபாமா தேர்ந்தெடுத்த நபர் குறித்த தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்பது நிச்சயம். தற்போது ஒபாமாவின் பரிந்துரையானது வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. இந்த நிலையில், அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, அந்தக் கட்சிக்கு ஏற்புடையவரே
உச்ச நீதிமன்ற நீதிபதியாக அறிவிக்கப்படுவார் என்பது நிச்சயம்.

கருத்துகள் இல்லை