Header Ads

  • BREAKING



    பிற மாநிலத்தவர்களுக்கு பணி நியமனம்: வங்கிகளுக்கு ராமதாஸ் கண்டனம்.

    தமிழகத்தில் உள்ள வங்கி காலிப் பணியிடங்களில் பிற மாநிலத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
    நிகழாண்டில் நாடு முழுவதும் 17,140 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், இவர்களில் 1,563 பேர் தமிழ்நாடு - புதுச்சேரியை உள்ளடக்கிய சென்னை வட்டாரத்தில் பணியமர்த்தப்படுவர் என்றும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
    இதற்கான தேர்வு ஒன்றுதான் என்றாலும், ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனியே விண்ணப்பங்கள் பெறப்பட்டுத் தேர்வு நடத்தியது.
    இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை மண்டலத்துக்கு நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கேரளம், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
    அந்தந்த மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தால் 1,563 இடங்களும் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கே கிடைத்திருக்கும்.
    எனவே, தமிழகத்தில் உள்ள வங்கிப் பணியிடங்களை தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்ப, வங்கிப் பணியாளர் தேர்வாணையங்கள் முன்வர வேண்டும். இதுதொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்த வேண்டும்.
    மேலும், போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் மாநில பாடத் திட்டத்தை தமிழக அரசு மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad