இணையத்தில் முதல் தகவல் அறிக்கை: காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி.
இணையதளத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது தொடர்பாக, காவல் துறை அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு, சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது.
நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பதியப்படும் முதல் தகவல் அறிக்கை உடனுக்குடன் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இம்மாதம் 15 -ஆம் தேதி முதல் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தமிழக காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையடுத்து காவல் நிலையத்தில் எழுத்தராக இருக்கும் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோருக்கு கணினியில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவது குறித்து பல்வேறு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டன.

இந்த நிலையில், இறுதிக்கட்டமாக ஆய்வாளர்கள், உதவி ஆணையர்கள் ஆகியோருக்கு மாநில குற்ற ஆவண காப்பகப் பிரிவு அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்தப் பயிற்சி வகுப்பு வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் துறை அலுவலகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. காலை, மாலை என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில் சுமார் 100 பேர் பங்கேற்றனர்.
பயிற்சியில், கணினியில் முதல் தகவல் அறிக்கையில் எவ்வாறு பதிவது, முதல் தகவல் அறிக்கையை கணினியில் பதியும்போது ஏற்படும் பிரச்னைகளை எப்படி தவிர்ப்பது, முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் எப்படி பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டன. இந்தப் பயிற்சி வகுப்பு, வரும் 10 -ஆம் தேதி வரை நடைபெறும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை