Header Ads

  • BREAKING



    நதிகள் இணைப்பு திட்டம் : சிறப்பு குழு அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

    டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, நதிகளை இணைக்க சிறப்பு குழு அமைக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
    இந்த கூட்டத்தில், 2016-17 சீசன் ரபி பருவ அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. எண்ணெய் தயாரிப்பு பயிர்களுக்கு குறைந்த விலைக்கு மேல் போனஸ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 100 உயர்த்தி, குவிண்டால் ரூ.1,625-க்கு கொள்முதல் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி நதிகளை இணைப்பது குறித்து சிறப்பு குழு அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad