ஹிலாரிக்கு ஆதரவாக ஒபாமா தீவிர பிரசாரம்!
வடக்கு கரோலினா மாகாணம், ஃபயெட்வில் நகரில் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களுடன் அதிபர் ஒபாமா.
ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான ஹிலாரிக்கு ஆதரவாக, அதிபர் ஒபாமா தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத வகையில், அதிபர் தேர்தல் பிரசாரத்தில் நீண்ட நேரம் அவர் செலவிட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.
ஒபாமா அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கும் அவரது ஜனநாயகக் கட்சிக்கும் அதிக அளவில் ஆதரவு தெரிவித்த கருப்பினத்தவர், தற்போது ஹிலாரிக்கு அதே வித ஆதரவை அளிக்கவில்லை என்று பல்வேறு கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஹிலாரிக்கு ஆதரவு திரட்டும் வகையில் அதிபர் ஒபாமா தீவிர பிரசாரத்தில் குதித்தார்.

வடக்கு கரோலினா மாகாணம், சார்லட் நகரில் ஜனநாயகக் கட்சி சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதைக் கூற முடியாத அளவுக்கு, ஊசல் நிலை நிலவுகிறது என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: வரும் அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று தெரியவில்லை. குறிப்பாக வடக்கு கரோலினா மாகாணத்தில் மிக கடுமையான போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்றார் ஒபாமா.
வடக்கு கரோலினா மாகாணத்தில் கருப்பினத்தவர் மக்கள்தொகை மிக அதிகமாகும். இங்கு கடந்த வாரம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப்புக்கு கூடுதல் ஆதரவு இருப்பதாகத் தெரிய வந்தது. இது ஹிலாரி தரப்பினை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், ஹிலாரிக்கு ஆதரவாக அதிபர் ஒபாமா தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை