Header Ads

  • BREAKING



    ஆர்க்டிக் கடலில் மர்ம சத்தம் - கனடா ராணுவம் ஆய்வு..!

    ஆர்க்டிக் கடலில் அடியாழத்தில் இருந்து மர்மமான 'பீப்' சத்தம் வருவதாக வந்த தகவலையடுத்து கனடா ராணுவம் அதை ஆராய அனுப்பப்பட்டுள்ளது.
    கனடாவில் இருக்கும் 'நுனாவட்' மக்கள், 'ஹம்' அல்லது 'பீப்' சத்தம் ஆர்க்டிக்கின் அடியாழத்தில் இருந்து வந்ததால் அதிர்ச்சியடைந்து, அரசிடம் புகார் அளித்துள்ளனர்.
    இதனால், உயிர்ச்செழிப்பு அதிகம் இருக்கும் அந்த இடத்தில், தற்போது அரவமற்று கிடப்பதாக கூறப்படுகிறது. இந்த மர்மமான சத்தத்தால், அங்கிருக்கும் விலங்குகள் பயந்திருக்கக்கூடும் எனப்படுகிறது.
    ரேடியோ அலைவரிசைகளால் வரும் சத்தமா, சுரங்கம் தோன்டுவதால் வரும் சத்தமா அல்லது விலங்குகள் வேட்டையாடப்படக் கூடாது என்பதற்காக இயற்கை செயற்பாட்டாளர்கள் உண்டாக்குகிற சத்தமா என்று பல்வேறு கோணங்களில் தகவல்கள் வந்த வண்ணம் இருப்பினும், இதுவரை இந்த சத்தம் எதனால் வருகிறது என்பதற்கு அதிகாரபூர்வ தகவல் வரவில்லை.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad