Header Ads

  • BREAKING



    அமெரிக்க அதிபர் தேர்தல் நாளில் தாக்குதல் தொடுக்க ஐ.எஸ். அறைகூவல்.

    வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள செவ்வாய்க்கிழமை அந்நாட்டு மக்கள் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும் என்று இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
    மேலும், அந்நாட்டு இஸ்லாமியர்கள் தேர்தலில் பங்கேற்கக் கூடாது என்றும் அந்த பயங்கரவாத இயக்கம் கூறியுள்ளது. உலகெங்கும் பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் எஸ்.ஐ.டி.இ. என்னும் அமைப்பு இந்தத் தகவலைத் தெரிவித்தது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் வலைதளத்தில் இது குறித்த கட்டுரை வடிவிலான அறிவிப்பு வெளியாகியுள்ளதாக எஸ்.ஐ.டி.இ. தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்புக் கட்டுரை ஆங்கிலத்தில் உள்ளது.
    அமெரிக்காவின் இரு பிரதான கட்சிகளின் கொள்கைகளில் எந்த வித்தியாசமும் கிடையாது எனவும் அவை இரண்டுமே இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானவை என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலின்போது தாக்குதல் நடத்துவதற்கு மத ரீதியான காரணங்களை விளக்கியுள்ளதுடன், அமெரிக்க வாழ் இஸ்லாமியர் தேர்தலில் பங்கேற்கக் கூடாது என்று கூறியுள்ளது.
    ஏற்கெனவே, தேர்தலுக்கு முன் அல்-காய்தா பயங்கரவாதக் குழு நியூயார்க் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தாக்குதல் நிகழ்த்தக் கூடும் என்று உளவுத் தகவல் கிடைத்துள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ஐ.எஸ். அறிக்கை வெளியாகியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad