3 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் சந்திப்பு.
புதுடெல்லி: 3 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே இந்தியா வந்தடைந்தார். இந்தியா வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே இன்று சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இருநாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரு தலைவர்களும் கூட்டு அறிக்கை வெளியிடுகின்றனர். பின் காந்தி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தும் தெரசா மே, இந்தியா கேட்டில் உள்ள போர் நினைவுச் சின்னத்தையும் பார்வையிட உள்ளார்.
முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற பிரிட்டன் தொழில்நுட்ப மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே-பிரதமர் மோடி பங்கேற்றனர்.
இதில் இந்திய முதலீடுகள் காரணமாக பிரிட்டன் பொருளாதாரம் உயர்ந்துள்ளது என பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா - பிரிட்டன் இடையே சிறந்த நட்புறவு உள்ளது எனவும் தெரசா மே கூறினார்.







கருத்துகள் இல்லை