டாடா நிலவரத்தை கவனிக்கவும்' எல்.ஐ.சி.,க்கு அரசு அறிவுறுத்தல்.
புதுடில்லி : டாடா குழுமத்தின் செயல்பாடுகளை, உன்னிப்பாக கவனித்து வருமாறு, பொதுத் துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி., மற்றும் வங்கிகளை, மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து, அதன் தலைவர் சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதை தொடர்ந்து, டாடா குழும நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில், அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், டாடா குழும நிறுவன பங்குகள் மதிப்பு, கடந்த மாதம், மூன்று நாட்களில், 27 ஆயிரம் கோடி ரூபாய் வரை குறைந்தது. தற்போது, டாடா நிறுவனங்களின் பங்குகள் விலை, வீழ்ச்சியில் இருந்து எழுச்சி கண்டு வருகிறது. டாடா குழுமத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த,எல்.ஐ.சி., மற்றும் வங்கிகள், அதிகளவில் முதலீடு செய்துள்ளன.
அதனால், அவற்றின் முதலீட்டாளர்களின் நலன் கருதி, டாடா குழும நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து, அதற்கேற்ப, நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.







கருத்துகள் இல்லை