Header Ads

  • BREAKING



    கூகிளின் புதிய தலைமையகம் லண்டனில்...

    பிரிட்டன் தலைநகர் லண்டனில், ஒரு பில்லியன் யூரோ மதிப்பில் தலைமையகத்தை கட்ட உள்ளது கூகுள். இந்த புதிய தலைமையகத்தை 2020க்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. லண்டனில் தலைமையகம் வரும் பட்சத்தில், புதிதாக 3,000 பேரை கூகுள் நிறுவனம் வேலைக்கு அமர்த்தும் என்று கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறிய பிறகு அதன் உலக வர்த்தகமும் முதலீடுகளும் பாதிக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், கூகுள் புதிய தலைமையகத்துக்கான திட்டத்தை அறிவித்துள்ளது.
    இது பற்றி, கூகுளின் சி.இ.ஒ சுந்தர் பிச்சை,'பிரிட்டனில், கணினி தொழில்நுட்பத்துக்கு, இங்கு இருக்கும் கல்வி நிலையங்களாலும் மற்றும் புதிதாக கண்டுபிடிக்கும் ஆர்வத்தினாலும் நல்ல எதிர்காலம் இருக்கிறது.
    ஆகவே, முன்னர் நாங்கள் சொன்னது போலவே எங்கள் முதலீடுகளையும் திட்டங்களையும் பிரிட்டனில் கொண்டு வருவோம்.' என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad