ட்ரம்ப் வெற்றிக்குப் பிறகு அச்சத்தில் உள்ளார்கள் - இந்திரா நூயி
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, 'வெள்ளையாக' இல்லாதோர் மத்தியில் அச்சம் நிலவுவதாக பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓ இந்திரா நூயி கூறியுள்ளார்.
ஹிலரி கிளின்டனின் ஆதரவாளராக இருந்த நூயி, ட்ரம்ப் வெற்றிக்குப் பிறகு, 'எனது மகள்கள் மற்றும் எனக்குக் கீழ் பணிபுரியும் நபர்களுக்கு நான் பதில் கூற வேண்டி இருந்தது. அவர்கள் எல்லாம் துக்கத்தில் இருந்தனர். அழுது கொண்டிருந்தனர். வெள்ளையாக இல்லோதோர், 'நாம் பாதுகாப்பாகத் தான் இருக்கிறோமா' என்று கேட்கின்றனர்' என்றார். அவர் மேலும், 'ஜனநாயகம் அதன் கடமையை செய்துவிட்டது. நாம் அதை ஏற்றுக் கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும்' என்று அமெரிக்க தேர்தல் முடிவு பற்றி கூறியுள்ளார்.
ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் பலர் அவரை சமூக வலைதளங்களில் தூற்றி வருகின்றனர். சிலர் இந்திரா நூயியை 'வெள்ளையர்களை வெறுப்பவர்' என்று கூட கூறி வருகின்றனர்.







கருத்துகள் இல்லை