BOSCH நிறுவனம் வழங்குகிறது... 3,000 பேருக்கு வேலை.
மும்பை: போஷ் நிறுவனம், நடப்பாண்டில், 3,000 பேரை, வேலைக்கு எடுக்க உள்ளது. சர்வதேச சந்தையில், பொறியியல் மற்றும் சேவை துறையில், போஷ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், இந்தியாவில், நடப்பாண்டில், 3,000 பேரை, வேலைக்கு எடுக்க உள்ளது. இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ராபர்ட் போஷ் கூறியதாவது:எங்கள் நிறுவனம், கடந்த ஆறு ஆண்டுகளில், 10 ஆயிரம் பேரை வேலைக்கு எடுத்துள்ளது. இதையடுத்து, மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை, 18 ஆயிரமாக அதிகரித்தது. எங்கள் நிறுவனத்திற்கு, பெங்களூரு, கோவையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் உள்ளன. பெங்களூரு மையத்திற்கு, 1,920 பேரை தேர்வு செய்ய உள்ளோம்; கோவையிலும், ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதன் மூலம், நடப்பாண்டில், 3,000 பேருக்கு மேல் வேலை வழங்க உள்ளோம். வேலைக்கு ஆட்களை எடுக்கும் போது, உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.







கருத்துகள் இல்லை