Header Ads

  • BREAKING



    NewsTEN இரவு செய்திகள்: 17/11/2016

    இரவுச் செய்திகள்
           17-11-2016


    ♈தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இலங்கை கடற்படையினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் டாக்டர் மகாராஜன்  கண்டனம்
    தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு காரணமான இலங்கை சிங்களப்படையினர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இண்டர்போல் உதவியுடன் கைது செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் டாக்டர் மகாராஜன்
    வலியுறுத்தியுள்ளார். மேலும் மீனவர்கள் தாக்கப்படவதற்கு ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும் அறிவுறித்தியுள்ளார்.

    ♈மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்!
    மதுரை: தூத்துக்குடி மாவட்டம் திருமங்கலம் குறிச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளிமூளைச்சாவு அடைந்ததையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.

    ♈பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான வழக்கு: 2 வாரத்திற்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட உத்தரவு
    காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் கிராமத்தை சேர்ந்த கருணாகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
    அதில், தாழம்பூர் பஞ்சாயத்தில் 70 சதவிகித மக்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை சார்ந்தவர்கள். ஆனால் அந்த தொகுதி பொது தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் பஞ்சாயத்து இட ஒதுக்கீட்டிற்கு சட்டம் இயற்ற வேண்டும் என கூறுகிறது. ஆனால் தமிழகத்தில் அவ்வாறு சட்டம் இயற்றப்படவில்லை.
    தமிழகத்தில் 12618 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அவற்றிற்கு, சார்பு சட்டங்களின் அடிப்படையில் தான் இட துக்கீட்டு முறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பஞ்சாயத்திற்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த சட்டம் இயற்றப்படவில்லை.
    2011 மக்கள் தொகை புள்ளி விவரம் இருந்தும், 2001 மக்கள் தொகை அடிபடையில் தான் தமிழக அரசு இட ஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறது. இதற்கு அரசு சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
    தற்போது, தாழ்த்தப்பட்டோர் பொதுபிரிவு, பொதுபிரிவு பெண்கள் என இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
    எனவே தாழம்பூர் கிராமத்தை பொது பிரிவிலிருந்து மாற்றி, தாழ்த்தப்பட்டோர் பஞ்சாயத்தாக மாற்ற வேண்டும். பொது பிரிவின் அடிப்படையில் தாழம்பூர் பஞ்சாயத்திற்கு தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதிக்க வேண்டும். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டு வார காலத்திற்குள் இதுகுறித்து பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.

    ♈ரெய்டுக்கு பயந்து பெட்டி பெட்டியாய் வெளியேறிய பணம்.. அலர்ட் அதிகாரிகள்!
    சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகார்களின்பேரில், நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர். இதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள், ரூ.26.68 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

    ♈சென்னையை சேர்ந்த இளைஞர் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் முதல் இடம் பிடித்து சாம்பியன்.
    டீ கே செஸ் பயிற்சி மையம் மற்றும் தூத்துக்குடியில் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்திய தமிழ்நாடு மாநில அளவிலான சதுரங்க போட்டியை நடத்தியது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் மொத்தம் 430 பேர் பங்கேற்றனர். போட்டியின் நடுவராக சர்வதேச நடுவர் ஆனந்தராம் நியமிக்கபட்டு 9 பிரிவுகளாக போட்டிகளை நடத்தினர்.
    சென்னையை சேர்ந்த இளைஞர் ராம் எஸ்.கிருஷ்ணன் 8.5 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் பி.ராஜசேகரன் இரண்டாம் இடத்தையும், மதுரையை சேர்ந்த செல்வமுருகன் மூன்றாம் இடத்தையும், தூத்துக்குடியை சேர்ந்த சின்னத்துரை நான்காம் இடத்தையும், திருநெல்வேலியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் மனோஜ் ஐந்தாம் இடத்தையும் பிடித்தனர்.

    ♈விமான நிலையங்களில் ரூ.5 கோடி மதிப்புள்ள பணம், நகை பறிமுதல்
    மும்பை: ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து பல விமான நிலையங்களில் நடந்த சோதனையில் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.5 கோடி என அதிகாரிகள் தெரியவந்துள்ளது.
    ♈மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருக்கும் சுஷ்மா சுவராஜ்
    டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிறுநீரகம் செயலிழந்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ♈காயமடைந்த மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்  திருமாவளவன்
    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிசூடு நடத்திய விவகாரத்தில் காயமடைந்த மீனவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
    ♈வங்கியின் பின்பக்கம் நடக்குறஇந்த முறைகேடை பாருங்க...
    ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததையடுத்து, அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்கள்படி வங்கியில் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து ரூபாய் நோட்டுகளை மாற்றி செல்கின்றனர். சிலர் முறைகேடாக வங்கியில் பணத்தை மாற்றி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

    ♈மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று விஜயவாடாவில் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றது.
    நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 49.1 ஓவர்களில் 184 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ♈சாக்கடையில் வீசப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளால் பரபரப்பு
    ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் சாக்கடையில் ரூ.30 லட்சம் மதிப்புடைய 500, 1000 நோட்டுகள் கிழிந்த நிலையில் வீசப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    ♈டாஸ்மாக் வருவாய் 5 நாளில் ரூ.100 கோடி இழப்பு
    சென்னை : ரூ.500, 1000 செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால், தமிழகத்தில் கடந்த 9ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை டாஸ்மாக் வருவாய் ரூ.100 கோடி வரை சரிந்துள்ளது.

    ♈காஷ்மீர்: நான்கு மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை
    ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் நான்கு மாத கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.

    ♈நவம்பர் 24 வரை சுங்கக் கட்டணம் ரத்து
    நவம்பர் 18ஆம் தேதி வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நவம்பர் 24ஆம் தேதி வரை அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ♈ரூ. 4000க்கு பதில் 2000 ரூபாய் தான் எடுக்க முடியுமாம்.. கேலிக் கூத்து.. கி.வீரமணி கண்டனம்
    சென்னை: ஒரு நாளைக்கு 4000 ரூபாய் எடுப்பதற்கு பதிலாக 2000 ரூபாய்தான் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது கேலிக் கூத்தாக இருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ♈4 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது
    சென்னை: தமிழகத்தில் 3 தொகுதிகள், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் மாலை 5:00 மணியுடன் பிரச்சாரம் முடிந்தது.தமிழகத்தில், தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில், பணப்பட்டுவாடா பிரச்னையால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவேல் மரணமடைந்தார். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியின் காங்., - எம்.எல்.ஏ., ஜான்குமார் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நான்கு தொகுதிகளில் நவ.,19ல் தேர்தல் நடக்க உள்ளது. நெல்லித்தோப்பு தொகுதியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார்.நான்கு தொகுதிகளிலும் மாலை 5:00 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.நெல்லித்தோப்பு தொகுதியில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.

    ♈சீனாவில் உள்ள இந்திய வங்கிகள் கூட பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்குவதில்லையாம்
    பெய்ஜிங்: சீனாவில் வாழும் இந்தியர்கள் அண்மையில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை அங்குள்ள இந்திய வங்கிகளில் டெப்பாசிட் செய்ய இயலவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
    சீனா அல்லது ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் இந்திய வங்கிக் கிளைகளில் 500, 1000 ரூபாய் பழைய நோட்டுக்களை டெப்பாசிட் செய்ய இயலாது என இந்திய தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

    ♈10 இந்திய மொழிகளை அறிமுகப்படுத்தியது பே.டி.எம்.
    வாடிக்கையாளர்களுக்காக 10 இந்திய மொழிகளை அறிமுகப்படுத்தியது. பே.டி.எம். மொபைல் அப்ளிக்கேஷன். இணையம் மூலம் பணப்பரிமாற்ற சேவை நடத்திவரும் பே.டி.எம். மொபைல் அப்ளிகேஷனில் போன் ரீசார்ஜ், டி.டி.எச் ரீசார்ஜ், பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்கள் உபயோகித்து வருகின்றனர். வாடிக்கையாளர்கள் தேவைக்காக தமிழ் மொழி உள்பட 10 இந்திய மொழிகளில் இந்த ஆப் இயங்க உள்ளது.

    ♈மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி... ஜல்லிக்கட்டுக்கு புது சட்டம் - ஜி.கே.வாசன்
    ஜல்லிக்கட்டு நடத்த நாடாளுமன்றத்தில் கொள்கை ரீதியிலான புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். கொள்கை ரீதியிலான சட்டம் கொண்டு வந்தால் வருகின்ற பொங்கல் பண்டிகையில் ஜல்லிக் கட்டு நடைபெறும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

    ♈பணம் செல்லாது என்ற அறிவிப்பை 3 நாட்களில் திரும்பப் பெற மாநில முதல்வர்கள் கெடு
    புது தில்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப் பெறுமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் கெடு விதித்துள்ளனர்.

    ♈தென் மாநிலங்களில் வெறுப்பு அரசியல்: ஐகோர்ட் நீதிபதி வேதனை
    சென்னை: வட மாநிலங்களை ஒப்பிடுகையில், தென் மாநிலங்களில் வெறுப்பு அரசியல் தான் நிலவுவதாக ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

    ♈இந்தியாவை எச்சரிக்க 'பார்டரில்' போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதா பாகிஸ்தான் ராணுவம்?
    இஸ்லாமாபாத்: இந்திய எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பகவல்பூர் நகரில்பாகிஸ்தான் ராணுவம் திடீர் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

    ♈டெல்லியில் 7-வது நாளாக நகைக்கடைகள் மூடல்
    டெல்லி : ரூபாய் நோட்டு நடவடிக்கையின் எதிரொலியாக, டெல்லியில் தொடர்ந்து ஏழாவது நாளான இன்றும் நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

    ♈எடப்பாடி துறையில் கைவைத்த ஓ.பி.எஸ்! -ரெய்டின் அதிர்ச்சி பின்னணி
    தமிழக நெடுஞ்சாலைத்துறையின் மூத்த அதிகாரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ரெய்டு நடவடிக்கை பாய்ந்துள்ளது. ' முதல்வர் துறையை கையில் வைத்திருக்கும் ஓ.பி.எஸ் அனுமதியின் பேரிலேயே ரெய்டு நடவடிக்கைகள் நடந்துள்ளன' என அதிர வைக்கின்றனர்.

    ♈இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு: காயமடைந்த மீனவர்களுக்கு புதுச்சேரியில் சிகிச்சை
    தமிழக மீனவர்கள் இருவர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதில் காயமடைந்த இரண்டு மீனவர்களுக்கு புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ♈அரிவாளை தலைக்குக் கீழ் வைத்துத் தூங்கிய கணவர்.. ராத்திரியில் எடுத்து வெட்டித் தள்ளிய மனைவி..
    திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தன்னைக் கொல்லத் திட்டமிட்டிருந்த கணவரிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள அவருக்கு முந்தி மனைவி வெட்டிக் கொலை செய்த செயல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    ♈3 தொகுதிகளிலும் தபால் வாக்கு கிடையாது : ராஜேஷ் லக்கானி அறிவிப்பு
    தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் உள்ள 3 தொகுதிகளிலும் தபால் வாக்கு கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் தபால் வாக்குகளில் முறைகேடு என திமுக.

    ♈ரூ.500,1000 நோட்டு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சரமாரியாக குவியும் பொதுநல மனுக்கள்
    ரூ.500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சரமாரியாக பொதுநல மனுக்கள் குவிந்து வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் மீது நாளை விசாரணை நடைபெற இருக்கிறது.

    ♈டெல்லியில் மம்தா, கெஜ்ரிவால் தலைமையில் போராட்டம்
    டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை மத்திய அரசு தீர்க்க வேண்டும். மம்தா, கெஜ்ரிவால் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். மக்களின் உயிரோடு மத்திய அரசு விளையாடுவதாக ஆம் ஆத்மி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ♈திருக்கழுக்குன்றம் அருகே ஏடிஎம் வரிசையில் நின்ற முதியவர் மயக்கம்
    திருக்கழுக்குன்றம் அருகே நடுவக்கரை ஏடிஎம் வரிசையில் நின்ற முதியவர் மயங்கி விழுந்தார்.  ஏடிஎம்யில் பணம் எடுக்க வரிசையில் நீண்ட நேரம் நின்றதால் முதியவர் நாகப்பன் மயக்கமடைந்தார்.

    ♈தோல்வியால் துவண்டேன்: ஹிலாரி உருக்கம்
    அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது:
    உங்களில் பலருக்கும் தேர்தல் முடிவு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம்.
    எனக்கும் அதே நிலைதான்; இந்தத் தோல்வியால் நான் பெரிதும் துவண்டுவிட்டேன்!

    ♈டென்மார்க் விமானி ஆன முதல் தமிழ் ஈழப் பெண்!
    ஆல்ப பாடல்கள் மூலம் பிரபலம் ஆனவர் ஈழத்துத் தமிழ் பெண் அர்ச்சனா செல்லத்துரை.
    டென்மார்க்கில் அவர் பைலட் பயிற்சியை முடித்து விமானியாகியுள்ளார்.
    டென்மார்க்கில் விமானி ஆன முதல் ஈழத்துத் தமிழ்ப் பெண் இவரே.

    ♈22,500 ஏடிஎம்கள் புதிய நோட்டுக்களை கையாளும் வகையில் மாற்றியமைக்கப்படும்: ஜேட்லி
    இன்று முதல் இந்த ஏடிஎம்கள் செயல்பட தொடங்கும் என்பதால் மக்களுக்கு நிம்மதி: ஜேட்லி
    புதிய 1000 ரூபாய் நோட்டுக்கள் இப்போதைக்கு அறிமுகம் கிடையாது: ஜேட்லி.

    ♈ரூ 500,1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப் பெறப்படமாட்டாது: அருண் ஜேட்லி
    டெல்லி: ரூ 500,1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப் பெறப்படமாட்டாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். வங்கி ஏ.டி.எம்.கள் புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றியமைக்கப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார். மேலும் மக்களை சிலர் தவறாக பயன்படுத்தி பணத்தை மாற்ற முயற்சிக்கின்றனர் என்றும் பொதுமக்களை பயன்படுத்தியதால் தான் வங்கியில் நீண்ட வரிசை காணப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

    ♈வங்கிகளில் மை வைப்பது ஒரு கண் துடைப்பு வேலை: வங்கி ஊழியர் சம்மேளனம் கண்டனம்
    கொல்கத்தா: வங்கிகளில் அடிக்கடி பணம் எடுப்பதை தடுக்கும் பொருட்டு வங்கிகளில் பணம் எடுப்பவர்களின் கைகளில் மை வைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வெறும் கண் துடைப்புதான் என்று வங்கி ஊழியர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
    இது குறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் பிஸ்வாஸ் கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
    பணம் எடுப்பவர்களின் கைகளில் மை வைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு. பெரும்பாலான வங்கிகளில் புதன்கிழமை இரவு வரை அந்த மை பெறப்படவில்லை.இன்று கூட வங்கிகளுக்கு திருப்திகரமான அளவில் மை வழங்கப்படவில்லை.
    தேர்தல் ஆணையமும் அந்த வகை அழியாத மையை வழங்க மறுத்து விட்டது. எனவே வேறு வழி இல்லாமல், எளிதில் அழிகின்ற மை வகையைதான் வங்கிகள் தற்போது பயன்படுத்துகின்றன.
    உயர் மட்டத்தில் இருந்து முறையான அனுமதி இல்லாமல் மையை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து விட்டது.
    இவ்வாறு அவர் கூறினார்.

    ♈தேனி, சின்னமனூரில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற கிருஷ்ணசாமி என்பவர் கைது அவரிடம் இருந்து 5,000 மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் மதுவிலக்கு பிரிவு போலிசார் நடவடிக்கை.

    ♈சென்னை அண்ணா மேம்பாலம் அருகே செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர் பத்திரமாக மீட்கப்பட்டார். ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால்  மனமுடைந்த ரவிச்சந்திரன்(30) செல்போன் டவரில் ஏறினார்.

    ♈வங்கிகளில் தவறுதலாக இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டால் வாக்களிக்க முடியாது:
    தமிழகத்தின் 3 தொகுதிகளில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவிப்பு.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad