NewsTEN இரவு செய்திகள்;17/11/2016
இரவு செய்திகள் 17/11/16
புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டம் தற்போது இல்லை--அருண் ஜெட்லி.
மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு விவகாரத்தை கையில் எடுத்து எதிர்கட்சிகள் அமளி.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி சதம்.
இணயம் துறைமுகத் திட்டம் 2020ல் முதல் அலகு செயல்படத் தொடங்கும்: பொன். ராதாகிருஷ்ணன்.
கிரானைட் வழக்கில் ஜனவரி 6-ம் தேதி பதில் தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
.
மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் அதிகமான மழைப்பொழிவு காணப்படுகிறது.இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது.அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் முட்டை விலை 4 நாட்களில் 40 காசு குறைந்துள்ளது. ஒரே நாளில் முட்டை விலை 20 காசுகள் குறைந்துள்ளது.கறிக்கோழி விற்பனையும் 30% வரை குறைந்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் செல்லா 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுவதில்லை.தமிழகத்தில் உள்ள 6,195 டாஸ்மாக் கடைகளில் வருவாய் ₹100 கோடி வரை சரிந்துள்ளது.வாடிக்கையாளர்கள் புதிய 2000 ரூபாய் நோட்டை கொடுத்தாலும் சில்லறை இல்லை.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை தடாகம் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் கோயில் படிகட்டுகளில் நின்றிருந்த யானை அருகே சென்று செல்ஃபி எடுக்க முயன்றவர்களை அந்த யானை ஓட ஓட விரட்டியது.
நெல்லை மாநகராட்சியில் 10ம் தேதியில் இருந்து இன்று வரை ரூ.3.7 கோடி வரி வசூல் ஆகியுள்ளது. 500,1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொதுமக்கள் வரி செலுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் விவசாயிகள் குறிதீர்ப்பு கூட்டம் நடந்தது.அதில் கலந்துகொண்ட மதிமுக விவசாய மகளிரணி, கலெக்டரிடம் மடிப்பிச்சை கேட்டனர்.நகைகளை அடகு வைக்க முடியவில்லை, வங்கிகளில் பணம் எடுக்க முடியவில்லை என கூறினர்.
மகாராஷ்ரா மாநிலம் நாசிக்கில் 2 கார்களில் இருந்த ரூ.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் 1000 நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.
இந்திய அரசாங்கத்தினால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சீனாவில் உள்ள இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாது என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
நாட்டில் அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது மத்திய அரசு என்று மம்தா பேசினார். நாட்டில் பொருளாதார அவசரநிலையை ஏற்படுத்திவிட்டதாக மோடி அரசு மீது மம்தா குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் நலனுக்காக பிரதமர் மோடி ரிஸ்க் எடுத்துள்ளார் என நடிகர் விவேக் ஓபுராய் கூறியுள்ளார்.
தங்கம், வெள்ளி விலை: மாலை நிலவரம்--
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,865
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.22,920
24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.30,210
வெள்ளி: ஒரு கிராம் - ரூ.44.50
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.41,595
22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.2,865
22 கேரட் தங்கம் ஒரு சவரன் - ரூ.22,920
24 கேரட் தங்கம் 10 கிராம் - ரூ.30,210
வெள்ளி: ஒரு கிராம் - ரூ.44.50
வெள்ளி கட்டி: ஒரு கிலோ - ரூ.41,595








கருத்துகள் இல்லை