Header Ads

  • BREAKING



    NewsTEN மாலை செய்திகள்.

    *NewsTENமாலை செய்திகள்*
                       *15-11-16*
    ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.ஆனால் இந்த அறிவிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மத்திய அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
    ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட திட்டத்திற்கு 82 சதவீத இந்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தடை மேலும் 3 வாரம் நீடிக்கப்பட்டுள்ளது.
    சென்னையில் பக்கிங்காம், அடையாறு கரையோரம் உள்ள 8000 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.அடையாறு கரையில் மட்டும் சுமார் 55000 ஆக்கிரமிப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.எஞ்சியுள்ள வீடுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இடிக்கப்படும் --தமிழக அரசு 
    மீண்டும் மீண்டும் வங்கியில் பணம் எடுக்க வருவதால் இன்று முதல் பண எடுக்க வரும் நபர்களின் கைவிரல்களில் அடையாள மை வைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இன்று காலை 7.40 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட ஏழு வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 
    ஏ.டி.எம் இயந்திரங்கள் மறு சீரமைக்கப்பட்டு சில நாட்களில் முழு வேகத்தில் செயல்படும்.வழிப்பாட்டு தலங்களில் காணிக்கையாக வரும் பணத்தை வங்கிகளுக்கு அனுப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேவையான அளவில் ரூபாய் நோட்டுகள் இருப்பில் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் --
    பொருளாதார செயலாளர் சக்திகாந்த் 
    இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா அருகே தன்டியிலிருந்து சன்சரி செல்லும் சாலையில் பெய்லி என்ற இடத்தில் 30 மீட்டர் நீளம் உள்ள பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    தமிழக நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில், 50 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    தமிழகத்தில் மணலை யூனிட் அடிப்படையில் விற்பனை செய்வது சட்டவிரோதமானது என, உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
    சென்னை, வியாசர்பாடி, சஞ்சீவி நகரைச் சேர்ந்த அப்பு என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
    சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். மின்கசிவால் கேண்டினில் பிடித்த தீயை ஊழியர்களே அணைத்தனர்.
    சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளம் பெண் பொறியாளரை கடத்த முயற்சி செய்த ஓலா டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்களில் விரைவில் 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வைக்கப்படும் என்று எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா அறிவித்துள்ளார்.
    நடிகை சபர்ணா, மன உளைச்சலால், தற்கொலை செய்ய அவசரப்பட்டு கையை அறுத்துக்கொண்டதும், பின்னர் நிதானமாகி, உடனே ஆம்புலன்சை அழைத்திருக்கிறார். ஆனால் ஆம்புலன்சு வராததால் அவர் மரணத்தை தழுவி உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    61 வயதான ஓய்வு பெற்ற விஞ்ஞானி காஞ்சிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
    கோவை யுவ பாரதி பப்ளிக் பள்ளியில் படிக்கும் சுதே மற்றும் மிருதுல் ஆகியோர் உடன் பிறந்த சகோதரர்கள். இவர்கள் நீச்சலில் புதிய சாதனை படைத்துள்ளனர்.இருவரும் சேர்ந்து 22.65 கிலோ மீட்டர் தூரத்தை எட்டு மணி நேரத்தில் நீந்தி கடந்தார்கள்.
    நமது நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் எடுத்துள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆனால் மக்கள் பணம் இல்லாமல் கஷ்ட்டப்படுகின்றனர் அதை பார்த்தால் மட்டும் தான் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது--நடிகர் விஜய் 
    நாகை, தெற்குவெளியை சேர்ந்த விவசாயி தன் வயலில் பயிர்கள் வாடியிருப்பதைக் கண்டு வேதனை அடைந்துள்ளார்.அதிகமான வேதனையாலே அவர் உயிரிழந்துள்ளார்.
    ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதை இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இதனால் கருப்புப் பணம் ஒழிவதோடு பணமில்லா வர்த்தகமும் அதிகரிக்கும் என இக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டு வலிகளை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் CII கூறியுள்ளது
    பிரதமர் மோடியின் தயார் ஹீரா பென் குஜராத், காந்திநகர் வங்கி ஒன்றுக்கு வந்திருந்தார்.வங்கியில் கூட்டம் இல்லை; அவரிடம் விண்ணப்பம் ஏற்கெனவே பெறப்பட்டிருந்தது.இதனால் சிரமமே இல்லாமல் ரூபாய் நோட்டுகளை எளிதாக மாற்றி சென்றார்.வங்கி காசாளர் அவருக்கு புதிய ₹2000 ரூபாய் நோட்டுகளை அளித்தார்.
    ஆண் வரிசையிலும் நிற்க அனுமதிக்க வில்லை. பெண் வரிசையில் நிற்வும் அனுமதிக்கவில்லை--ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் திடீரென தனது மேற்சட்டையை கழற்றியதால் டில்லியில் பரபரப்பு ஏற்பட்டது.
    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் --பைக் வாங்க ஆசைப்பட்டு பாட்டியை கொன்ற பொறியியல் கல்லூரி மாணவர் கைது
    கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த புத்தூர் பஞ்சாய்த்து, பெரியபுத்தூரை சேர்ந்த
    விதவை பெண்ணை துன்புறுத்திய நான்கு பேர் கைது
    கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சில்லறை தட்டுப்பாடு, இதை தொடர்ந்து, லாரி போக்குவரத்து நிறுத்தம். அதனால், உத்திரபிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள உப்பு தட்டுபாடு போன்ற செய்திகளை தொடர்ந்து, தமிழகத்திலும் உப்பு கிடைக்காது என்று வாட்ஸ் அப்பில் பரவிய வதந்தியால், நேற்று காலை முதல் சேலம், நாமக்கல் மாவட்டங்களின் பல கிராமங்களில் உப்பு விலை கிடுகிடுன உயர்ந்தது.
    புகார் கொடுத்தும் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை' என்று இளம்பெண் ஒருவர், தனது இரு குழந்தைகளுடன் மதுரை உயர் நீதிமன்ற கிளை வாசலில் தீக்குளிக்க முயன்றார். 
    அறிக்கையில் இருப்பது யார் கையெழுத்து? சில நாட்கள் முன்பு கை ரேகை வைத்தவர் இன்று கையெழுத்து போட்டு இருக்கிறார் என்பதை நம்பும் படியாக இல்லை.விரைவில் அந்த அம்மையாரை திரைமறைவில் இருந்து இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் --ஸ்டாலின்
    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுமாறு மத்திய அரசு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்ப திட்டமிட்டிருக்கும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. 

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad