Header Ads

  • BREAKING



    பாரத ஸ்டேட் வங்கியில் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் தகராறு.

    திருவள்ளுர் மாவட்டத்தில் பல வங்கிகளில் ஏ.டி.எம். மையங்கள் இன்னும் செயல்படவில்லை. பாதுகாப்புத்துறை ஊழியர்கள் அதிகம் உள்ள ஆவடியில் எச்.வி.எப். சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் மாலை 5 மணி அளவில் தகராறு ஏற்பட்டது. பணம் தேவைப்படுவோர் காலை 7 மணிக்கே வந்து வரிசையில் நின்று நாங்கள் சொல்லும்படி டோக்கனை பெற்று வரிசையில் வந்தால் மட்டுமே பணம் வழங்க முடியும். இல்லையென்றால் பணம் தர முடியாது என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் சிலர் வங்கி ஊழியர்களிடம் சாப்பிடாமல் வெகு நேரமாக நிற்கிறோம்.

    எங்கள் பணத்தை நாங்கள் வாங்க காத்துக்கிடக்கிறோம். நீங்கள் விரைவாக பணியாற்றினால் கூட்டம் குறையும். நாள் ஒன்றுக்கு 200 டோக்கன் மட்டும் தந்தால் வரிசையில் காத்திருப்போரின் நிலை என்ன ஆகும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்தினர்.

    இந்திய விமானப் படையில் பணியாற்றும் ரன்வீந்தர் சிங் என்பவர், 4 நாட்களாக வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்பினால் பிரச்சனை இருக்காது. மேலும், வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஒரு நாளைக்கு 4 தடவைக்கு டீ குடிக்க செல்கின்றனர். செல்போன்களில் 10க்கும் மேற்பட்ட முறைகளில் பேசி வருகின்றனர். வங்கி ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றார்.

    இதேபோல வங்கியில் நகைகளை அடகு வைத்திருப்பவர்களின் நிலை இன்னும் மோசமாகிவிட்டது. நகையை மீட்க சிலர் பணத்தை கட்டிவிட்டு, நகையை திருப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். திருவள்ளுர் அடுத்த புட்லுர் கிராமத்தைச் சேர்ந்த மோகனா என்பவர், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 26 ஆயிரம் ரூபாய்க்கு நகையை அடகு வைத்திருந்தேன். நகையை மீட்க வங்கிக்கு சென்று பணம் கட்டினால், பணத்தை பெற்றுக்கொண்ட வங்கி நிர்வாகம், ஒரு வாரம் கழித்துத்தான் நகையை திரும்ப தரமுடியும் என்று கூறி வருகின்றனர் என்று கவலை தெரிவித்தார்.

    இதேபோல கூட்டுறவு வங்கி, நிலவள வங்கி, கிராமப்புற வங்கிகளிலும் இதே நிலை நீடிப்பதால் கிராமப்புற மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad