NewsTEN மாலை செய்திகள்.
16\11\16
அனைத்து வகையிலும் அரசை தாக்குங்கள் : சோனியா உத்தரவு
புதுடில்லி : அனைத்து வகைகளிலும் மத்திய அரசு மீதான தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என கட்சி எம்.பி.,க்களும் காங், தலைவர் சோனியா உத்தரவிட்டுள்ளார்
தஞ்சை வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: ரூ.41 ஆயிரத்துடன் 2 பேர் சிக்கினர்
தஞ்சாவூர் தொகுதியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட 2 பேரை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த கட்சி வேட்பாளருக்காக இவர்கள் பணம் கொடுக்க முயன்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மூன்று தொகுதிகளிலும் அனைத்து அமைச்சர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் பிரசாரம் அனல் பறந்து வருகிறது.
இதனிடையே, அதிமுக, திமுக கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாகவும், இதனால் இந்த தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், தஞ்சாவூர் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்பட்டியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்ற 2 பேரை தேர்தல் பறக்கும் படையினர் இன்று கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 41 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ள பறக்கும் படையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, அதிமுக, திமுக கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாகவும், இதனால் இந்த தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், தஞ்சாவூர் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்பட்டியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்ற 2 பேரை தேர்தல் பறக்கும் படையினர் இன்று கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 41 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ள பறக்கும் படையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி மருத்துவமனையில் சுஷ்மா சுவராஜ் அனுமதி
டெல்லி : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்திய கல்லூரி மாணவன்!
காதலிக்க மறுத்த 10-ம் வகுப்பு மாணவியை, கல்லூரி மாணவர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் ஆண்டிபட்டி அருகே நடந்துள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ராஜகோபாலன்பட்டியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் இன்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கல்லூரி மாணவர் நவின்குமார், மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டார்.
இதனைப் பார்த்த சகமாணவிகள் அலறினர்.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மாணவி காதலிக்க மறுத்ததால் அவரை கல்லூரி மாணவர் கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது. தலைமறைவான மாணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதனைப் பார்த்த சகமாணவிகள் அலறினர்.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மாணவி காதலிக்க மறுத்ததால் அவரை கல்லூரி மாணவர் கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது. தலைமறைவான மாணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நாட்டு நலனுக்காக ஒற்றுமையுடன் செயல்படுவோம்: மோடி அழைப்பு
புதுடில்லி : இன்று துவங்கும் பார்லி., குளிர்கால கூட்டத்தில் வெளிப்படையான, அதேசமயம் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக பார்லி.,க்கு வந்த பிரதமர் மோடி, பார்லி., வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். ஆலோசனைஅப்போது பேசிய அவர், கடந்த கூட்டத்தொடரின் போது ஜிஎஸ்டி போன்ற மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது மிகப் பெரிய நடவடிக்கை. இதனை நிறைவேற்ற உதவிய எதிர்க்கட்சிகள் அனைவருக்கும் எனது நன்றி. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் பல ஆக்கபூர்வமான விவாதங்கள் நடக்க உள்ளன. அனைத்து விவகாரங்கள் குறித்தும் அனைத்து கட்சிகளுடன் ஆலோசிக்கப்படும். பல்வேறு விவகாரங்கள் குறித்து நல்லதொரு விவாதங்கள் நடக்கும் என நம்புகிறேன்.
அந்த விவகாரங்களில் அனைத்து கட்சிகளும் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். மக்களின் நன்மைக்காக அதனை நாங்கள் கருத்தில் எடுத்துக் கொள்வோம். தயார் ஒவ்வொரு விவகாரம் குறித்தும் வெளிப்படையான விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. அதன் முடிவில் மிக நல்ல முடிவுகள் எடுக்கப்படும்.
வரி முறையை சீர்திருத்தம் செய்ய நினைக்கிறோம். எங்களின் நடவடிக்கைகளின் நோக்கம் இந்தியாவிற்கு நன்மை தருவது மட்டுமே. எம்.பி.,க்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் அது வெற்றிக்கு வழிவகுக்கும்.நாட்டின் நன்மைக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் எனக்கூறினார்.
லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைப்பு
புதுடில்லி : இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இதில், ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது, காஷ்மீர் பதற்ற நிலை, ஓஆர்ஓபி விவகாரம் உள்ளிட்டவைகள் தொடர்பாக குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. ஆக்கபூர்வமான, வெளிப்படையான விவாதங்கள் நடக்கும் என பிரதமர் மோடியும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், இருஅவைகளிலும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. லோக்சபாவில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோயில் உண்டியல் திறப்பு
500,1000 செல்லாது என அறிவிக்கப்பட்ட பின் போதிய சில்லறை தட்டுப்பாட்டை தவிர்க்க வேண்டி நெல்லையப்பர் கோயில் உண்டியல் இன்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது. இதில் சவுதி அரேபியா ரியால் மற்றும் 500,1000 ரூபாய் கட்டுகளும் இருந்தன.முழுவதும் மாலையில் வங்கியில் செலுத்தப்படுகிறது.
மத்திய அரசு தடையை எதிர்த்து ஜாகீர் நாயக் அமைப்பு மேல்முறையீடு
மதபோதகர் ஜாகீர் நாயக்கின் தன்னார்வத் தொண்டு அமைப்புக்கு ஐந்து வருடம் தடை விதித்து மத்திய அரசு நேற்று உத்தரவுப் பிறப்பித்தது. மத்திய அரசின் தடை சட்டவிரோதமானது என்றும், நியாயமற்றது என்றும் ஜாகீர் நாயக் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவமதிப்பு வழக்கு.. பிவாண்டி கோர்ட்டில் ஆஜரான ராகுல்காந்திக்கு ஜாமீன்
மும்பை: காந்தி கொலை தொடர்பாக அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது ஆர்.எஸ்.எஸ். வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் பிவாண்டி நீதிமன்றத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆஜரானார். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ரூபாய் பிரச்சினை... ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்று ஜி.ராமகிருஷ்ணன் கைது
சென்னை: பழைய ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். சென்னை பாரிமுனையில் ரிசர்வ் வங்கி அருகே மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்று அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிக்கிறதா விஜய் மக்கள் இயக்கம்?
கரூர் : தமிழகத்தில் நடக்கும் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு விஜய் மக்கள் இயக்கம் ரகசிய ஆதரவு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என் பணத்தை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது சரியா? மாநிலங்களவையில் காரசார விவாதம்
புது தில்லி: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று காரசார விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சோனியா காந்தியை நலம் விசாரித்த மோடி !
பிரதமர் மோடி இன்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
காபூலில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் நடந்த தற்கொலைப்படையினர் நடத்திய மோட்டார் வாகன குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் புலி மெஹ்மூத் கான் பகுதியில் உள்ள ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகத்தின் வளாகத்தில் நடந்ததாக ஆப்கன் பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 4 பேர் பலியானதாகவும், 11 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் புலி மெஹ்மூத் கான் பகுதியில் உள்ள ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகத்தின் வளாகத்தில் நடந்ததாக ஆப்கன் பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 4 பேர் பலியானதாகவும், 11 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்மையானவர்கள் பயப்பட தேவையில்லை: பியூஸ் கோயல்
புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் நேர்மையானவர்கள் பயப்பட தேவையில்லை என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.ரூபாய் நோட்டு வாபஸ் குறித்த விவாதம் ராஜ்யசபாவில் நடந்து வருகிறது. விவாதத்தை துவக்கி வைத்து பேசிய காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மாவுக்கு பதிலளித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசியதாவது: தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். நேர்மையானவர்கள் பயப்பட தேவையில்லை. முதல்முறையாக நேர்மையானவர்கள் பாராட்டப்படுகிறார்கள். தவறு செய்தவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு தருகிறார்கள். கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவது தேவையானது.இந்த நடவடிக்கையை எடுக்க பிரதமர் மற்றும் அரசுக்கு உரிமை உள்ளது.
தலையிலும், விரலிலும் 'மை' அடிப்பதை நிறுத்துங்கள்: வைரமுத்து 'நச்'
சென்னை: பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றும்போது விரலில் மை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தலையிலும், விரலிலும் 'மை' அடிப்பதை நிறுத்துங்கள் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை இழக்கப்போகிறோம்: மத்திய அரசை சாடும் தமிழக அரசு
மத்திய அரசின் அறிவிப்பால் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் முடங்கிப்போயுள்ளதாகவும், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை இழக்கக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
அரசால் கறுப்பு பணம் பதுக்கியவர்களுக்கு நிம்மதி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி: மத்திய அரசு நடவடிக்கையால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்கள் நிம்மதியாக உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
கொந்தளிப்பை தணிக்க நவாஸ் ஷெரீப் ஆலோசகர் இந்தியா வருகை
பாகிஸ்தான் உயர்மட்ட வெளியுறவு அதிகாரி சர்தாஜ் அஜிஸ், இந்தியாவில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்துக் கொள்ள இந்தியா வர உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த பயணத்தின் மூலம், இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள கொந்தளிப்பை தணிக்க முயற்சி செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகள் முடங்கும் நிலையைத் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின்
கோவில்பட்டி-இளையரசனேந்தல் சுரங்க இரயில் பாதைக்கு அணுகுசாலை உடனே அமைக்க வைகோ கோரிக்கைமதிமுக பொதுச்செயலாளர் வைகோ
இந்தியாவெங்கும் வங்கி, ஏ.டி.எம் களில் காத்திருந்த 33 பேர் மரணம்!
உழைத்து சம்பாதித்த பணத்தை, வங்கியில் இருந்தும், ஏ.டி.எம்-மில் இருந்தும் எடுப்பதற்கு பல மடங்கு உழைக்க வேண்டியிருக்கிறது. ஒருநாளைக்கு 2,000 ரூபாய் எடுப்பதற்கே குறைந்தது இரண்டு மணி நேரமாகிறது. ஏ.டி.எம்-மில் ஒருநாளைக்கு 2,500 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்; வங்கிகளில் நாள் ஒன்றுக்கு 4,500 ரூபாய் மட்டுமே மாற்றித்தர முடியும்; ஒருவரே திரும்பத்திரும்ப வங்கிக்கு வருதைத் தடுக்க விரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு புதுப்புது ஐடியாக்களைக் கொண்டு வந்தாலும், நெரிசல் குறைந்தபாடில்லை.
அன்றாடச் செலவுகளுக்குத் தேவையான பணத்தை எடுப்பதற்குள் மக்கள் சின்னாபின்னமாகிவிடுகின்றனர்.
1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள், இதன் விளைவாக இந்தியாவில் 33 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
அன்றாடச் செலவுகளுக்குத் தேவையான பணத்தை எடுப்பதற்குள் மக்கள் சின்னாபின்னமாகிவிடுகின்றனர்.
1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள், இதன் விளைவாக இந்தியாவில் 33 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
ரூ500 கோடி ஆடம்பர திருமணம்... சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டியை ஏன் கைது செய்யவில்லை? காங். கேள்வி
டெல்லி: ரூ500 கோடி ஆடம்பர திருமணம் நடத்திய சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டியை ஏன் மத்திய பாஜக அரசு கைது செய்யவில்லை என ராஜ்யசபாவில் காங். மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கேள்வி எழுப்பினார்.
அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் : கருணாநிதி
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரி 4 தொகுதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து திமுக தலைவர் கருணாநிதி, டுவிட்டரில் அறிக்கை
டில்லியில் மம்தா தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி
புதுடில்லி : ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணியாக சென்றனர்.ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரிக்கை விடுப்பதற்காக மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடக்கிறது. இதில், மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.,வின் முக்கிய கூட்டணி கட்சியாக இருக்கும் சிவசேனாவும் கலந்து கொண்டுள்ளது. தேசியவாத கட்சி, உமர் அப்துல்லாவின் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் கலந்து கொண்டுள்ளன.
சென்னையில் மை வைக்கும் பணித் தொடங்கியது.
பழைய ரூபாய் நோட்டுகள் மாற்ற வருவோருக்கு மை வைக்கும் பணி, சென்னை வங்கிகளில் தொடங்கியுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில் 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை: சென்னை ஐகோர்ட்டில் புதிய நீதிபதிகளாக 3 பேர் இன்று பதவி ஏற்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதிகள் ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு புதிய நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து புதிய நீதிபதிகள் 3 பேரும், ஐகோர்ட்டு நீதிபதியாக இன்று ஏற்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
டிசம்பர் 11-ல் சென்னை மாரத்தான் பந்தயம்
சென்னை ரன்னர்ஸ் சார்பில் ஷப்ரோ நிறுவனம் ஆதரவுடன் மாரத்தான் பந்தயம் சென்னையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 5-வது ஷப்ரோ சென்னை மாரத்தான் பந்தயம் டிசம்பர் 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
நோட்டுகள் செல்லாத விவகாரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை தர வேண்டும்: மாயாவதி
டெல்லி: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத என்ற நடவடிக்கை குறித்து அவைக்கு பிரதமர் மோடி அறிக்கை தர வேண்டும் என்று மாநிலங்களவையில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி
தஞ்சாவூர் அதிமுக வேட்பாளர் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதா கைரேகை வைத்திருப்பதால் அதிமுக நிராகரிக்க சியேச்சை வேட்பாளர் காந்தி கோரிக்கை வைத்தார்.
மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அரசின் நடவடிக்கை பற்றி முன்கூட்டியே தேவைபட்டவர்களுக்கு தெரிவித்துக்கப்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் கூற்றம்சாட்டியுள்ளது.
ஈக்வடார் தூதகரத்தில் அசாஞ்சே மீது விசாரணை!
அமெரிக்க ராணுவம் தொடர்பான ரகசியக் கோப்புகளை விக்கிலீக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (வயது 45) மீது நடவடிக்கை எடுக்க, அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்தது. இதைத்தொடர்ந்து, அவர் லண்டனிலுள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். இதற்கிடையே, ஸ்வீடனில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாஞ்சேமீது அந்நாட்டில் வழக்கு தொடரப்பட்டது. தூதரகத்தைவிட்டு அசாஞ்சே வெளியேறினால் அவர் கைது செய்யப்பட்டு ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவார் என்பதால், அவர் 2012ஆம் ஆண்டில் இருந்து ஈக்வடார் தூதரகத்திலேயே தொடர்ந்து தங்கியிருக்கிறார். இந்நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு பாலியல் வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக ஸ்வீடன் அரசின் துணை தலைமை வழக்கறிஞர் இன்று லண்டன் வந்தார். அவருடன் ஒரு பெண்ணும் வந்திருந்தார். நேராக ஈக்வடார் தூதரகத்துக்குச் சென்ற வழக்கறிஞர், அசாஞ்சேவிடம் விசாரணை நடத்தினார். ஈக்வடார் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ரகசியமாக விசாரணை நடப்பதால், விசாரணை விவரங்களை வெளியிட முடியாது என ஸ்வீடன் வழக்கறிஞர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மூன்று நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது. விசாரணையின் முடிவில் அசாஞ்சே ஒப்புதல் அளித்தால் அவரது டிஎன்ஏ மாதிரி எடுத்து பரிசோதிக்கப்படும். இந்த விசாரணை முடிவுகள் அனைத்தும் எழுத்துபூர்வ ஆவணமாக தயாரிக்கப்பட்டு ஸ்வீடன் வழக்கறிஞர்களிடம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதன்பின்னர், அரசு வழக்கறிஞர்கள் அடுத்தகட்ட விசாரணையை தீர்மானிப்பார்கள். விசாரணையின்போது அசாஞ்சேவின் பதில்களுக்கு விளக்கம் கேட்க ஸ்வீடன் வழக்கறிஞர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் புதிய கேள்விகள் எதையும் கேட்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாஞ்சேவிடம் விசாரணை நடத்தத் தொடங்கிய அதேசமயம், ஈக்வடார் தூதரகத்துக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் சிலர் ஆதரவு பேனர்களை ஏந்தியபடி ஆதரவு கோஷமிட்டனர்.
டெல்லியில் பணம் மாற்ற வருவோருக்கு இடது கை ஆள்காட்டி விரலில் மை
புதுடெல்லி: வங்கிகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோருக்கு விரலில் மை வைக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள வங்கியில் மை வைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுகிறது,







கருத்துகள் இல்லை