Header Ads

  • BREAKING



    50 ஆயிரம் மட்டுமே அனுமதி. மத்திய அரசின் அடுத்த அதிரடி!!!

    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த நிலையில்,வழக்கத்தில் உள்ள ஜன்தன் கணக்குகளில் அதிகபட்ச டெபாசிட் வரம்பு ரூ.50,000 ஆக நிர்ணயித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது, கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், திடீரென அதிக பட்ச தொகையை ஒரு சிலர், ஜன்தன் கணக்குகளில் செலுத்துவதாகவும் புகார் எழுந்தது.

    இதன் தொடர்பாக பிரதமர் தலைமையில் நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.மேலும், இதனை கண்காணிக்க தற்போது தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, ஜன்தன் கணக்குகளில் டெபாசிட் உச்சவரம்பு ரூ.50 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார விவகார செயலாளர் சக்தி காந்ததாஸ் நேற்று தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad