ஜார்க்கண்ட் மாநிலத்தில் 12,000 பசுக்களுக்கு அடையாள எண்.
பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 12 ஆயிரம் பசுக்களுக்கு சிறப்பு அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.
கால்நடைகள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தவிர்க்க, கால்நடை மற்றும் எருமை மேம்பாட்டு நிறுவனம் பசுக்களுக்கு சிறப்பு எண் வழக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. ராஞ்சி, ஹசாரிபாக், தான்பாத், போகாரொ, ஜாம்செட்பூர், தியோகார்க், கிரிதிக் மற்றும் லோகார்தாகா ஆகிய மாவட்டங்களில் திட்டம் அமலுக்குவந்துள்ளது என்றும் 12 ஆயிரம் பசுக்களுக்கு அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மாடுகளின் வயது, இனம், இருப்பிடம், நிறம், கொம்பின் வகை, வாலின் கலர், சிறப்பு அங்க அடையாளம் மற்றும் பிற தகவல்கள் அதனுடன் இணைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.








கருத்துகள் இல்லை