கூடங்குளம் அணுமின் உலையில் மேலும் இரு உலைகளுக்கு அனுமதி.
கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகளுக்கு எதிரான வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைக்க கடலோர பகுதி ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு சார்பில் தொடர்ந்த வழக்கை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கி அமர்வு,வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு கோரி மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் மற்றும் இந்திய அணுசக்தி கழகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.








கருத்துகள் இல்லை