காஞ்சிபுரம் அருகே 40 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி கொள்ளை.
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே அடகுக் கடை உரிமையாளர் வீட்டில் 40 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். விஷ்ணுபிரியா நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சாந்தாராம். அடகுக் கடை உரிமையாளரான இவர் நேற்று முன் தினம் இரவு, குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு காலையில் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த சாந்தாராம் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 40 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி, 17 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கொள்ளைச் சம்பவம் குறித்து சாந்தாராம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








கருத்துகள் இல்லை