ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து உற்சாகம்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டில் தொடர் விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களாகவே சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். காலையிலும், மாலையிலும் இதமான குளிர் நிலவுவதால், அங்குள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா, மீன் காட்சியகம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோயில் ஆகிய பகுதிகளை ரசித்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்வதால் சுற்றுலா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்காடு படகு குழாமிலும் உற்சாகமாக படகு சவரி செய்து மகிழ்ந்தனர்








கருத்துகள் இல்லை