இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று இங்கிலாந்து அரசு தாவூத் இப்ராகிமின் சொத்துகளை முடக்க திட்டம்.
இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சொத்துகளை இங்கிலாந்து அரசு முடக்க உள்ளது. மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக இந்தியாவால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிமிற்கு, இந்தியா,பாகிஸ்தான், இங்கிலாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஸ்பெயின், சைப்ரஸ், மொராக்கோ ஆகிய நாடுகளில் சொத்துகள் உள்ளன. இந்தியா அளித்த ஆவணங்கள் அடிப்படையில், ஐக்கிய அரபு அமீரகம், தாவூத் இப்ராகிமின் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த ஜனவரியில் முடக்கியதாக தகவல் வெளியானது. துபாய் உள்ளிட்ட இடங்களில் இருந்த சொத்துகள் முடக்கப்பட்டன. இதேபோல, இங்கிலாந்து அரசுக்கும் தாவூத் இப்ராகிம் தொடர்பான சொத்து விவரங்களை இந்தியா அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.








கருத்துகள் இல்லை