விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தமிழக அரசின் பதில் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.
விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தமிழக அரசின் பதில் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. விவசாயிகள் பிரச்சனை குறித்து தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த பதில்மனுவில், வறட்சி காரணமாக விவசாயிகள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்தது. விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க தமிழக அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், தமிழக அரசின் பதில் மனு மீது 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரணை நடத்த உள்ளது.








கருத்துகள் இல்லை