22 கேரட் அளவுக்கும் குறைந்த அளவில் தங்க நகை விற்பனை, இந்திய தர சான்றிதழ் நிறுவனம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான நகை கடைகளில் 22 கேரட் அளவுக்கும் குறைந்த அளவில் தங்க நகை விற்பனை செய்யப்படுவதாக கூறி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை 22 கேரட் சுத்தமான அளவுடன், 916 KDM முத்திரையிட்ட ஹால் மார்க் சின்னத்துடன் விற்பனை செய்ய வேண்டும் என அரசாணை உள்ளது. ஆனால் தமிழகத்தின் பெரும்பாலான நகை கடைகளில் 22 கேரட் அளவுக்கும் தரம் குறைந்த நகைகளை விற்பனை செய்வதாக கூறி, அழகுஜோதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். ஹால்மார்க் முத்திரை இல்லாத தரம் குறைத்த நகைகளை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள், உள்துறை செயலாளர், வணிக வரி ஆணையர், இந்திய தர சான்றிதழ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.








கருத்துகள் இல்லை