உத்ரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் முறைகேடு: எந்திரங்களை சீல் வைக்க உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு.
வாக்கு எந்திரத்தில் முறைகேடு புகாரால் 6 தொகுதி எந்திரங்களை சீல் வைக்கும்படி உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில் வெற்றியை இழந்த முசோரி, டேராடூன் ராஜ்பூர்ரோடு, பெல் ராணிப்பூர், ரெய்பூர், பிரதாப் நகர், ஹரித்துவார் ரூரல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் முறைகேடு நடந்ததாக கூறி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து அந்த 6 தொகுதிகளின் ஓட்டு எந்திரங்களை சீல் வைக்கும்படியும்,மத்திய மற்றும் மாநில தேர்தல் கமிஷன், 6 தொகுதி எம்.எல்.ஏ.க்களும் பதில் அளிக்கவும் நீதிபதி எஸ்.கே. குப்தா உத்தரவிட்டார். ஏற்கனவே விகாஸ்நகர் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் நீதிமன்ற உத்தரவால் சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








கருத்துகள் இல்லை