ஏழு பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் அதிரடி மாற்றம்.
ஏழு பொதுத்துறை வங்கிகளுக்கு புதிய தலைவர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேசஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் வாராக்கடன்கள் தேங்கியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சில அதிகாரிகள் பதவி மூப்பு காரணமாக ஓய்வு பெறும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தில் உள்ள மெத்தனத்தைக் களைய இந்த புதிய தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் பல வங்கிகளின் மூத்த அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்








கருத்துகள் இல்லை