ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 டன் செம்மரக்கட்டை பறிமுதல்.
வேலூர் மாவட்டம் சோளிங்கரில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 டன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திர செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கொடுத்த தகவலின் பேரில், வாகன சோதனை நடத்திய போலீசார், நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரியை விரட்டிப்பிடித்து சோதனையிட்டனர். அதில் 5 டன்கள் செம்மரக்கட்டைகள் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்ததுடன், ஓட்டுனர் நாகராஜன் என்பவரையும் கைது செய்தனர். தகவலறிந்து வந்த ஆந்திர மாநில செம்மரக்கட்டை தடுப்பு பிரிவு போலீசார், செம்மரக்கட்டைகளை எடுத்துச் சென்றதுடன், ஓட்டுனர் நாகராஜனையும் விசாரணைக்காக ஆந்திரா அழைத்து சென்றனர்.








கருத்துகள் இல்லை