பெட்ரோல் பங்க்குகளில் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் நிலையங்களை மூடியதால் மக்கள் அவதி.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பெட்ரோல் பங்க்குகளில் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளன. லக்னோவில் கடந்த 27ம் தேதி சிறப்பு குழுவினர் 7 பெட்ரோல் பங்க்குகளில் சோதனை நடத்தினர். இதில் பெட்ரோல் போடப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களில் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்குகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து உள்ளனர்.








கருத்துகள் இல்லை