மாட்டுவாரா மல்லையா?: லண்டன் சென்றது சி.பி.ஐ.
பிரிட்டனில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர்.
கிங்ஃபிஷர் விமான நிலையத்தின் தலைவரும், தொழிலதிபருமான விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் 9000 கோடி கடன் பாக்கி வைத்துவிட்டு, கடந்த ஆண்டு லண்டன் தப்பிச் சென்றார். இந்நிலையில், விஜய் மல்லையா கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி லண்டனில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால், மூன்று மணி நேரத்தில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதன் படி சி.பி.ஐ கூடுதல் இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான 4 பேர் கொண்ட குழு லண்டன் சென்றடைந்தது. அதில் அமலாக்கத்துறையை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.








கருத்துகள் இல்லை