உலகம் முழுவதும் அதிவேக இன்டர்நெட் வசதி அளிக்க 4,425 செயற்கைக்கோள்கள்.
உலகம் முழுவதும் அதிவேக இன்டர்நெட் வசதி அளிக்க வசதியாக நான்காயிரத்து 425 செயற்கைக்கோள்களை அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், 2019 -ம் ஆண்டிலிருந்து 2024 -ம் ஆண்டு வரை அடுத்தடுத்து இந்த செயற்கைக் கோள்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. பால்கான் 9 ராக்கெட்டுகள் மூலம் இந்த செயற்கைக் கோள்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்மாதிரி செயற்கைக் கோள்கள் இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் அனுப்பப்பட உள்ளன. இவற்றின் மூலம் வீடுகள், கல்வி மற்றும் வணிக நிறுவனங்களில் அதிவேக இன்டர்நெட் வசதி கிடைக்கும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு விநாடிக்கு ஒரு ஜிபி வீதம் இன்டர்நெட் சேவை கிடைக்கும். இது தற்போது கிடைக்கும் வசதியைவிட நூறு மடங்கு அதிகமாகும்.








கருத்துகள் இல்லை