Header Ads

  • BREAKING



    ஐஎஸ்எம் படத்தின் ரிசல்டிற்காக காத்திருக்கும் மாகேஷ் பாபு.

    டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவிற்கு போக்கிரி, பிஸ்னஸ்மேன் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மீண்டும் மகேஷ் பாபு இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு ஜன கன மன என பெயரிடப்பட்டுள்ளதாக பூரி ஜெகன்நாத் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். இதனை மகேஷ் பாபுவும் உறுதி செய்திருந்தார். ஆனால் அதன் பின்னர் எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு, அப்படத்திற்கு பின்னர் பூரி ஜெகன்நாத் இயக்கும் படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. பூரி ஜெகன்நாத்தின், சமீபத்திய படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் அவரது இயக்கத்தில் ஐஎஸ்எம் எனும் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
    கல்யாண் ராம் நாயகனாக நடிக்கும் ஐஎஸ்எம், படத்தின் வெற்றியைப் பொருத்தே மகேஷ் பாபு - பூரி ஜெகன்நாத் இணையும் புதிய படத்தின் துவக்கம் இருக்கும் என மகேஷ் பாபு தரப்பிலிருந்து தகவல்கள் கூறுகின்றன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad