Header Ads

  • BREAKING



    மத்திய பட்ஜெட் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல்: மத்திய அரசு அறிவிப்பு.

    புதுதில்லி : மத்திய பட்ஜெட் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளத்து.
    மேலும் பட்ஜெட் கூட்டத் தொடர் இனி ஜனவரி மாதம் தொடங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயில்வே பட்ஜெட் இனி தனியாக தாக்கல் செய்யப்படாது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து மாலையில் தாக்கல் செய்யப்பட்டு வந்த மத்திய பட்ஜெடை 16 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை கொண்டுவரப்பட்டது.
    அதே போல் இப்போது மீண்டும் ஒரு மிகமுக்கியமான மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
    அதாவது பிப்ரவரி 28ம் தேதிக்கு பதில் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
    பட்ஜெட் கூட்டத் தொடர் இனி ஜனவரி மாதம் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad