2017 ஏப்ரலுக்கு பின் பழைய 500, 1000 ரூபாய் நோட்டு வைத்திருந்தால் தண்டனைக்குரிய குற்றம் ..!
டெல்லி: 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின் தற்போது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி இரவு அதிரடியாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனையடுத்து மக்கள் தங்களிடமுள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி வருகின்றனர். டிசம்பர் 30-ந் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின் மார்ச் இறுதி வரை ரிசர்வ் வங்கிகளில் பணத்தை மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவலைமத்திய அரசு அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இது பற்றி தகவல் தெரிவித்த ரோத்தகி, மத்திய அரசு இந்த புதிய சட்டத்தை கொண்டு வருமானால், 500, 1000 ரூபாய் கருப்பு பணத்தை வைத்திருப்பது அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என்றார். இச்சட்டம் அதிகளவில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தும் என்றார்.







கருத்துகள் இல்லை