உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமைப் பதிவாளர், 3 புதிய நீதிபதிகள்.
சென்னை உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளராக மாவட்ட நீதிபதி ஆர்.சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு, சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருக்கும் எஸ்.என். சேஷசாயி, சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளராக இருக்கும் என்.சதீஷ்குமார், தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலராக இருக்கும் டீக்காராமன் ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

கூடுதலாக நியமிக்கப்பட இருக்கும் 3 புதிய நீதிபதிகளும் புதன்கிழமை (நவ.16) பொறுப்பேற்க உள்ளனர். இந்த நிலையில், புதிய நீதிபதிகள் பட்டியலில், தற்போது உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளராக இருக்கும் என்.என்.சதீஷ்குமாரும் இடம்பெற்றுள்ளார். ஆகையால், அந்த இடத்துக்கு புதிதாக தலைமைப் பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, உயர்நீதிமன்றப் பதிவுத்துறை வெளியிட்ட அறிவிக்கை விவரம் வருமாறு: தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவின்படி, கீழ்கண்ட பணியிட மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக இருக்கும் என்.சதீஷ்குமார், உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்கவுள்ளார். ஆகையால், அந்த இடத்துக்கு மாவட்ட நீதிபதி ஆர்.சக்திவேல் நியமிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை