Header Ads

  • BREAKING



    கருப்பு பணம் வைத்துள்ள நிறுவனங்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவேன்.

    மும்பை: கருப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் கரன்சியை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பாஜவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'சாதாரண மக்கள் மீது இது போன்ற தாக்குதலை தொடுப்பதற்கு பதிலாக சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் மீது பிரதமர் மோடியால் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்த முடியுமா' என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சவால் விடுத்தார்.
    காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறுகையில், 'ஏழை மக்களை பாதிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ள பாஜ மீது கூட்டணி கட்சிகள் சர்ஜிக்கல் தாக்குவதற்கு இதுதான் சரியான தருணம்.
    எனவே கூட்டணியை விட்டு சிவசேனாவெளியே வர வேண்டும்' என்று அதிரடியாக தாக்கினார்.
    தற்போது உத்தவ் தாக்கரேவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ள நிறுவனங்களின் பட்டியலை வெளியிடுவேன் என பாஜ எம்பி கீர்த்தி சோமையா திடீர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''சர்ஜிக்கல் தாக்குதல் என்றால் என்ன என்று நான் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு விரைவில் காட்டுவேன். சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பண முதலைகள் மீது பிரதமர் மோடி சர்ஜிக்கல் தாக்குதல் நடத்த வேண்டுமென தாக்கரே கூறுகிறார். 
    அடுத்த வாரம் நான் ஒரு பட்டியலை வெளியிட உள்ளேன். கருப்பு பணத்தை பதுக்கியுள்ள நிறுவனங்களின் பட்டியல்தான் அது. பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் நம்பி-்கையை குலைக்க வேண்டாம். அவ்வாறு குலைத்தால் உங்களுக்கு எதிராக மக்கள் நடத்தும் சர்ஜிக்கல் தாக்குதலின் விளைவை காண வேண்டி வரும். மும்பை மாபியாக்கள், கருப்பு பணம் பதுக்கிய நிறுவனங்களின் பட்டியலை அடுத்த வாரம் நான் வெளியிடுவேன். அப்போது காங்கிரஸ், என்சிபி கட்சிகளுக்கு கருப்பு பணம் எங்கே பதுக்கப்பட்டுள்ளது என்று தெரிய வரும் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad