Header Ads

  • BREAKING



    செவாலியே கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா! சரத், ராதாரவிக்கு அழைப்பில்லை!! -விஷால்.

    சிவாஜிகணேசனைத் தொடர்ந்து கமல்ஹாசனுக்கு செவாலியே விருது வழங்கப் பட்டிருப்பதை கொண்டாடும் வகையில், நவம்பர் 27-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தின்போது அவருக்கு பாராட்டு விழா நடத்துகிறார்கள். இந்த விழாவுக்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் மட்டுமின்றி முன்னணி கலைஞர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது.ஆனால், முன்னாள் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு இல்லையாம். நடிகர் சங்க விவகாரத்தில் அவர்கள் மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் இந்த நேரத்தில் அவர்களை அழைப்பது சரியல்ல என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக விஷால் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad